வங்கதேச பிரதமராகும் தாரிக் ரஹ்மானுக்கு மோடி வாழ்த்து!
வங்கதேச பொதுத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற Bangladesh Nationalist Party தலைவர் Tarique Rahmanக்கு பிரதமர் Narendra Modi வாழ்த்து தெரிவித்துள்ளார். 299 தொகுதிகளில் 212க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ள பிஎன்பி, வங்கதேச அரசியலில் புதிய கட்டத்தை தொடங்கியுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியாகியதுடன், சமூக வலைதளமான ‘எக்ஸ்’ வழியாக பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியை பகிர்ந்தார். தாரிக் ரஹ்மான் தலைமையின் மீது வங்கதேச மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இந்த வெற்றி வெளிப்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார். ஜனநாயகம், முற்போக்கு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வங்கதேசத்துக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இருநாடுகளுக்கிடையேயான பன்முக உறவுகளை வலுப்படுத்தி, பொதுவான வளர்ச்சி இலக்குகளை அடைய இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார். புதிய அரசுடன் நெருக்கமான ஒத்துழைப்பை இந்தியா எதிர்நோக்கி காத்திருக்கிறது என்ற அவரது பதிவு, அண்டை நாட்டுடனான உறவை மேலும் வலுப்படுத்தும் சிக்னலாக பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
