நாளை பிரதமர் மோடி திருச்சி வருகை.. டிரோன்கள் பறக்க தடை!
பிரதமர் நரேந்திர மோடி திருச்சி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் நாளை முழுவதும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார்.

பிரதமர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருச்சிக்கு வர உள்ளதால் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தடை ஆளில்லா வான்வழி வாகனங்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த உத்தரவை மீறி டிரோன்கள் அல்லது பிற ஆளில்லா வான்வழி சாதனங்களை பறக்கவிடும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
