வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து!
மத்திய வெளியுறவு மந்திரி டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Prime Minister Narendra Modi extends birthday wishes to External Affairs Minister S. Jaishankar.
— United News of India (@uniindianews) January 9, 2026
In a post on social media, PM Modi wrote, “Best wishes to Dr. S. Jaishankar Ji on his birthday. He has served the nation as a distinguished diplomat and is now playing a key role in… pic.twitter.com/iveJrXaJgh
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். சிறந்த இராஜதந்திரியாக நாட்டிற்கு அவர் ஆற்றிவரும் சேவையை பாராட்டியுள்ளார்.

மேலும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையையும், உலக நாடுகளுடனான உறவுகளையும் வலுப்படுத்துவதில் ஜெய்சங்கர் முக்கிய பங்கு வகித்து வருவதாக கூறியுள்ளார். அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்வு பெற வேண்டும் என்றும் பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
