பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து... வைரலாகும் பதிவு!
பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழியில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் கொண்டாடப்படுவதையடுத்து, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தமிழக மக்களுக்கு சிறப்பு வாழ்த்து பதிவை வெளியிட்டுள்ளார்.
Yesterday, I took part in a very memorable Sankranti and Pongal programme. May this festival strengthen the bonds of togetherness, bring prosperity and inspire us to celebrate our cultural traditions with joy and gratitude. pic.twitter.com/TlMvbbWLN5
— Narendra Modi (@narendramodi) January 14, 2025
அந்த பதிவில், பொங்கல் மனித உழைப்புக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவை நினைவூட்டும் திருநாள் என குறிப்பிட்டுள்ளார். விவசாயம், விவசாயிகள், கிராமப்புற வாழ்க்கை ஆகியவற்றுடன் இந்தப் பண்டிகை ஆழமாக தொடர்புடையது என்றும் தெரிவித்துள்ளார். குடும்பத்தினர் ஒன்றிணைந்து மகிழ்ச்சியையும் அன்பையும் பகிரும் நாளாக பொங்கல் திகழ்வதாகவும் கூறியுள்ளார்.
மேலும், வளமான தமிழ் பாரம்பரியத்தின் அடையாளமாக பொங்கல் பண்டிகை விளங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா இருப்பதில் பெருமை கொள்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த தைத்திருநாள் அனைவருக்கும் செழிப்பு, வெற்றி மற்றும் நல்ல ஆரோக்கியம் அளிக்கட்டும் என அவர் வாழ்த்தியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
