நாளை மோடி இலங்கை பயணம்... சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக படகுகள் விடுவிப்பு!

 
 மோடி

இந்திய பிரதமர் மோடி 3 நாள் அரசுமுறைப் பயணமாக நாளை இலங்கை செல்ல உள்ளார். பிரதமரான பிறகு 2019ல் இலங்கைக்கு சென்றிருந்த பிரதமர் மோடி  அதன் பிறகு அந்நாட்டுக்கு அவர் மேற்கொள்ளும் 2வது பயணம் இதுவாகும். 

 மோடி

இலங்கை அரசு முறைப் பயணத்தில் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க உடன் பிரதமர் மோடி ஆலோசிக்க இருப்பதாகவும், அந்நேரத்தில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில்  மீனவர்கள் பிரச்சினையின் முக்கிய அம்சங்களை இரு தரப்பும் விரிவாக ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகிள்ளது. இலங்கை வசம் உள்ள 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், இந்திய மீனவர்களை விடுதலை செய்ய உள்ளதாகவும் இலங்கை அரசுடைமையாக்கப்பட்ட 74 இந்திய மீனவர்களின் படகுகளை நடுக்கடலில் மூழ்கடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

 மோடி

யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளில் பிடிக்கப்பட்ட படகுகளை கடலில் மூழ்கடிக்க இலங்கை கடற்படை திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி இலங்கை சென்று திரும்பியதும், படகுகளை மூழ்கடிக்கும் பணி முன்னெடுக்கப்பட இருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web