அட... வைரல் வீடியோ!! மெட்ரோவில் பயணம் செய்யும் மோடி!!

 
மோடி  மெட்ரோ

டெல்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு நிறைவு விழா இன்று நடைபெறுகிறது. இதற்கான கொண்டாட்டம் பல்கலைக்கழக விளையாட்டு வளாகத்தின் பல்நோக்கு அரங்கில் இன்று ஜுன் 30ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்து கொள்ள உள்ளார்.  இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக   பிரதமர்   மோடி டெல்லி மெட்ரோவில் பயணம் செய்தார்.


 

இந்த பயணத்தில் போது ரயிலில்  பயணம் செய்த பொதுமக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.பிரதமர் டெல்லி பல்கலைக்கழக கணினி மையம் மற்றும் அகாடமி கட்டிடம் மற்றும் பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் கட்டப்படும் கல்வித் தொகுதிக்கு அடிக்கல் நாட்ட இருப்பது குறிப்பிடத்தக்கது.  மெட்ரோ ரயிலில் சக பயணிகளிடம் சிரித்துப் பேசிய பிரதமர் மோடி, இளைஞர்களின் கருத்துக்களை கேட்டு, தனது எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டார்.

மோடி  மெட்ரோ

இந்த பயணத்தின்போது, இளைஞர்களின் கருத்துக்களை பிரதமர் மோடி கவனமாக கேட்டுக் கொண்டார்.பிரதமரின் மெட்ரோ ரயில் பயணம் குறித்து ரயிலில் பயணம் செய்த பயணிகள் ஆச்சரியம் அடைந்தனர். அத்துடன் பிரதமருடன் இணைந்து செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர். இதுகுறித்த  புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web