மோடி நீண்ட கால நண்பர்... ட்ரம்ப் நெகிழ்ச்சி!
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 6 அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கனடா தொழிலதிபர் தஹாவூர் ராணா என்பவர் மூளையாக செயல்பட்டது . தற்போது 63 வயதாகும் தஹாவூர் ராணாவை 2009ம் ஆண்டு எப்.பி.ஐ. அதிகாரிகள் சிகாகோவில் கைது செய்தனர். தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தஹாவூர் ராணாவை நாடு கடத்தும்படி அமெரிக்காவிடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில், தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்த தடை விதிக்கக் கோரி, கலிபோர்னியா மற்றும் சான் பிரான்சிஸ்கோ கோர்ட்டுகளில் தஹாவூர் ராணா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் தஹாவூர் ராணா மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு, தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். 2 நாட்கள் பயணமாக மோடி அமெரிக்கா சென்றுள்ளார்.

இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா ஒப்புக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இது குறித்து "மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட மிகவும் ஆபத்தான ஒருவரை நாங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம்" எனக் கூறியுள்ளார். இதற்காக அதிபர் டிரம்புக்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி "மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொர்புடைய பயங்கரவாதி இந்தியாவுக்கு விசாரணைக்காக நாடு கடத்தப்படுகிறார். இந்த செயல்முறையை விரைவுபடுத்தியதற்காக அதிபர் டிரம்புக்கு நான் நன்றி கூறுகிறேன்" என கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
