பிப்ரவரி 28ம் தேதி பிரதமர் மோடி மதுரை வருகை... கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு!
பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 28ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரசாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரசாரத்தை தொடங்கியுள்ளது. கடந்த மாதம் 23ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டணியின் முதல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், பிப்ரவரி 28ஆம் தேதி மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
