பிரதமர் மோடி மலேசியா பயணம்… வர்த்தகம் முதல் கலாசாரம் வரை அதிரடி ஆலோசனை!
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக மலேசியா சென்றுள்ளார். இந்தப் பயணத்தின் போது வர்த்தகம், பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல முக்கிய துறைகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளது. இந்தியா–மலேசியா இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தப் பயணத்தின் போது மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் மற்றும் அந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியினர், தொழில் மற்றும் வணிக பிரதிநிதிகளுடனும் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார். மேலும், இந்தியா–மலேசியா தலைமைச் செயல் அதிகாரிகள் மன்றம் நடைபெற உள்ளது. இந்திய வம்சாவளி கலைஞர்கள் பங்கேற்கும் கலாசார நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 800 கலைஞர்கள் ஒரே மேடையில் தொடர்ந்து நடனம் ஆடி சாதனை படைக்க முயற்சி மேற்கொள்கிறார்கள்.
மலேசியாவில் சுமார் 29 லட்சம் இந்திய வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். இது உலகின் முக்கியமான இந்திய வம்சாவளி சமூகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தப் பயணம் இரு நாடுகளுக்கிடையேயான அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றமும் நடைபெற உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
