எம்.ஜி.ஆர் ‘நாளை நமதே’ பாடலுடன் மலேசியாவில் மோடிக்கு விருந்து... !
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக மலேசியா சென்றுள்ளார். அவரை விமான நிலையத்தில் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான உயர்நிலை பேச்சுவார்த்தை நடைபெற்றது. முக்கிய ஒப்பந்தங்களும் இரு பிரதமர்களின் முன்னிலையில் கையெழுத்தானது.
எனது நண்பர் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அளித்த மதிய விருந்தில், பாடப்பட்ட பாடல்களில் ஒன்றாக மகத்தான மனிதர் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாளை நமதே' என்ற பாடலும் இருந்தது!
— Narendra Modi (@narendramodi) February 8, 2026
இந்தியாவில் உள்ள நம்மில் பலரைப் போலவே, பிரதமர் அன்வர் இப்ராஹிமும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்… pic.twitter.com/SEjT7Zaalw
இதையடுத்து மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், பிரதமர் மோடிக்கு விருந்து அளித்தார். அப்போது நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாளை நமதே’ பாடல் பாடப்பட்டது. இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் தமிழில் பதிவு வெளியிட்டார்.
அந்த பதிவில், பிரதமர் அன்வர் இப்ராஹிம் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் என்றும் குறிப்பிட்டார். மேலும் மலேசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மோடி, தமிழ் மொழியும் தமிழர் பண்பாடும் இந்தியா-மலேசியா உறவை வலுப்படுத்துகின்றன என்றும், புதிய ஒலி-ஒளி ஒப்பந்தம் கலாசார தொடர்பை மேலும் உயர்த்தும் என்றும் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
