அனைவரும் திருக்குறள் படிப்போம்...திருவள்ளுவர் தினத்தில் பிரதமர் மோடி மரியாதை!
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவள்ளுவரின் படைப்புகளும் சிந்தனைகளும் கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வள்ளுவருக்கு மரியாதை செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவர் தினமான இன்று, ஏராளமான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் படைப்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட பன்முக ஆளுமை திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். நல்லிணக்கமும் கருணையும் நிறைந்த ஒரு சமூகத்தின் மீது அவர் நம்பிக்கை வைத்தார். தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு… pic.twitter.com/WkIY56Mvq5
— Narendra Modi (@narendramodi) January 16, 2026
நல்லிணக்கமும் கருணையும் நிறைந்த சமூகத்தின் மீது திருவள்ளுவர் நம்பிக்கை வைத்திருந்தார் என மோடி கூறியுள்ளார். தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு அவர் எடுத்துக்காட்டாகத் திகழ்வதாகவும் பதிவில் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவப் பெருந்தகையின் அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். திருக்குறள் உலக மனிதநேயத்திற்கு வழிகாட்டும் நூல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
