எக்ஸ் வலைதளத்தில் மோடியின் பதிவுகள் புதிய சாதனை… டாப் 10 லைக்குகளில் 8 பதிவு!

 
மோடி
 

கடந்த 30 நாட்களில் எக்ஸ் சமூக ஊடகத்தில் அதிக லைக்குகளை பெற்ற முதல் 10 பதிவுகளில், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் இடம்பிடித்துள்ளன. ஒரே அரசியல்வாதியாக இந்த பட்டியலில் மோடி இடம்பெற்றுள்ளார். மொத்தமாக அவரது 8 பதிவுகள் 1.60 லட்சம் மறுபதிவுகளையும், 14.76 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளன.

மோடி

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இந்தியா வந்தபோது, பிரதமர் மோடியுடன் காரில் பயணித்த புகைப்படம் 2.14 லட்சம் லைக்குகளை பெற்றது. புதினுக்கு பகவத் கீதை வழங்கிய பதிவு 2.31 லட்சம் லைக்குகளையும், பிரதமர் இல்லத்தில் வரவேற்ற பதிவு 1.79 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் புதினுக்கு அளிக்கப்பட்ட முப்படை அணிவகுப்பு மரியாதை புகைப்படமும் பெரும் வரவேற்பை பெற்றது.

மோடி

இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனீஸின் திருமணத்திற்கு மோடி வாழ்த்து தெரிவித்த பதிவு, அயோத்தி ராமர் கோயிலில் காவிக் கொடி ஏற்றப்பட்ட நிகழ்ச்சி தொடர்பான பதிவுகள் உள்ளிட்டவையும் அதிக லைக்குகளை பெற்றுள்ளன. இதனிடையே, எக்ஸ் வலைதளத்தில் ஒரு நாட்டில் கடந்த 30 நாட்களில் அதிகம் லைக் செய்யப்பட்ட ட்வீட்களை காட்டும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதும் கவனம் பெற்றுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!