நாளை ஜி20 உச்சிமாநாட்டிற்கு தென்னாப்பிரிக்கா செல்லும் பிரதமர் மோடி!

 
மோடி
 

ஜோகன்னஸ்பர்கில் நடைபெறும் 20-ஆவது ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 21-ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்குப் பயணம் செய்ய உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜி20 தலைவர்கள் கூடும் இந்த மாநாடு நவம்பர் 22 அன்று தொடங்குகிறது.

மாநாட்டின் மூன்று முக்கிய அமர்வுகளிலும் பிரதமர் மோடி உரையாற்றுவார் எனத் தகவல்கள் கூறுகின்றன. உலகளாவிய ஒத்துழைப்பு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் தெற்குத் துருவ நாடுகளின் பரஸ்பர இணைப்பை வலுப்படுத்தும் விவாதங்களில் அவர் பங்கேற்க உள்ளார். நவம்பர் 23 வரை நீளும் இந்தப் பயணத்தின்போது, இந்தியா–பிரேசில்–தென்னாப்பிரிக்கா தலைவர்களின் சந்திப்பிலும் பிரதமர் கலந்து கொள்வார்.

மோடி

தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன், துருக்கி அதிபர் எர்டோகன், பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர், கனடா பிரதமர் மார்க் கார்னி உள்ளிட்ட பல உலகத் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!