சோமநாத் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்… 1000 ஆண்டு வரலாற்றை நினைவூட்டிய உரை!

 
மோடி
 

குஜராத்தில் 3 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று காலை கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சோமநாத் மகாதேவ கோவிலில் சாமி தரிசனம் செய்தார். ஹெலிபேட்டில் வந்திறங்கிய அவரை முதல்வர் பூபேந்திர பட்டேல் வரவேற்றார். காலை 9.45 மணியளவில் பூஜைகள் செய்து வழிபட்ட பிரதமர், பின்னர் சோமநாத் கோவிலில் இருந்து தொடங்கிய சவுரியா யாத்திரையிலும் பங்கேற்றார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, சோமநாத் கோவிலின் உண்மையான வரலாறு நீண்ட காலம் மறைக்கப்பட்டதாக கூறினார். கோவிலை அழித்ததன் மூலம் படையெடுப்பாளர்கள் வெற்றி பெற்றதாக நினைத்தனர். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் சோமநாதரின் கொடி உயர்ந்து பறக்கிறது. இந்த போராட்டத்திற்கு உலக வரலாற்றில் இணை இல்லை என்றார்.

சோமநாதர் சுயமரியாதை விழாவில் பேசிய அவர், சோமநாதரின் வரலாறு அழிவின் கதை அல்ல என்றும், வெற்றி மற்றும் புத்துணர்ச்சியின் கதை என்றும் தெரிவித்தார். பலமுறை அழிக்க முயன்றாலும் கோவில் இன்று கம்பீரமாக நிற்கிறது. இது நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் தேசிய பெருமையின் சின்னம் என பிரதமர் மோடி உருக்கமாக பேசினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!