உலக அளவில் முண்ணனி... பிரதமர் மோடி யூடியூப் சேனலுக்கு 25 மில்லியன் ஃபாலோயர்கள்!

மும்பையில் நேற்று மே 1ம் தேதி WAVES 2025 மாநாடு தொடங்கி நடத்தப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்டு மோடி உரையாற்றினார். இந்நிகழ்வில் இந்தியாவின் டிஜிட்டல் துறை வளர்ச்சி பற்றி பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. அப்போது இதில் கலந்து கொண்ட யூ-டியூப் தலைமை செயல் அதிகாரி நீல் மோகன் “ இந்தியா தற்போது கன்டென்ட் கிரியேட்டர்களின் நாடாக மாறி வருகிறது. இந்திய கிரியேட்டர்களின் புதுப்புது வீடியோக்கள் வெளிநாட்டவரை வெகுவாக ஈர்க்கிறது. வெளிநாட்டவர்கள் இதுவரை 4500 மணிநேரம் அளவுக்கு இந்திய யூ-டியூப் சேனல் கன்டென்டை பார்த்துள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்திய யூ-டியூபர்கள் ரூ.21000 கோடியை வருமானமாக பெற்றுள்ளனர். அடுத்த 2 ஆண்டுகளில் இந்திய யூ-டியூபர்களின் முன்னேற்றம், அவர்கள் கன்டென்டை உலகளவில் பிரபலப்படுத்த ரூ.850 கோடி ஒதுக்கீடு செய்ய உள்ளோம்.
இந்தியாவில் 1 மில்லியன் (10 லட்சம்) ஃபாலோவர்களை கொண்டவர்கள் எண்ணிக்கை 11000லிருந்து 15000ஆக உயரந்துள்ளது. உலக அளவில் அதிகம் யூடியூப் ஃபாலோவர்களை வைத்திருப்பது பிரதமர் மோடி தான். அவர் 25 மில்லியன் பின்தொடர்பாளர்களை வைத்துள்ளார் என யூ-டியூப் CEO மோகன் நீல் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!