140 கோடி இந்தியர்களுக்கும் எத்தியோப்பியாவின் இந்த கவுரவ விருதை அர்ப்பணிக்கிறேன்... பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று எத்தியோப்பியா சென்றார். இரண்டு நாள் அரசுமுறை பயணமாக அந்நாட்டை சென்றடைந்த அவரை, பிரதமர் அபி அகமது அலி விமான நிலையத்திலேயே வரவேற்றார். பின்னர் அவரை தன்னுடன் ஒரே காரில் அழைத்து சென்றது கவனம் பெற்றது. இரு தலைவர்களும் சந்திப்பின்போது, இந்தியா–எத்தியோப்பியா உறவு ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என மோடி நினைவுபடுத்தினார்.
இந்த சந்திப்பில் பேசும்போது, பொருளாதாரம், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள், பாதுகாப்பு, சுகாதாரம், திறன் மேம்பாடு உள்ளிட்ட பல துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வாய்ப்பு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியாவில் கல்வி பயிலும் எத்தியோப்பிய மாணவர்களுக்கான உதவித்தொகையை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்தார். மொழி, பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றில் பன்முகத்தன்மையுடன் ஒற்றுமையை கொண்ட நாடுகளாக இந்தியாவும் எத்தியோப்பியாவும் உள்ளன என்றும் அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து எத்தியோப்பியா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “இங்கு மக்களின் விருப்பமே அரசின் விருப்பமாக மாறுகிறது” என்று பாராட்டினார். விவசாயிகள், தொழில்முனைவோர், பெண்கள், இளைஞர்கள் அனைவரிடமும் பேசுவதாக அவர் கூறினார். எத்தியோப்பியாவின் உயரிய விருதை பெற்றதற்கு பெருமை கொள்வதாக தெரிவித்த மோடி, அந்த விருதை 140 கோடி இந்திய மக்களுக்கு அர்ப்பணிப்பதாகக் கூறி கைகூப்பி ஏற்றுக்கொண்டார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
