இந்தியா உலகின் 3வது பெரிய ஸ்டார்ட் அப் நாடாக வளர்ந்துள்ளது... மன் கி பாத் நிகழ்வில் மோடி பெருமிதம்!

 
மோடி

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகும் மன் கி பாத் நிகழ்ச்சியின் 130-வது பகுதி இன்று நடைபெற்றது. 2026-ம் ஆண்டின் முதல் மன் கி பாத் இது என்றும், நாளை குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 18 வயது நிரம்பிய அனைவரும் கட்டாயம் வாக்காளராக பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வெளிநாடு மோடி விமானத்தில்

இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட் அப் நாடாக வளர்ந்துள்ளதாக கூறிய பிரதமர், இந்திய கலாசாரம் மற்றும் பண்டிகைகள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதாக பெருமிதம் தெரிவித்தார். தமிழ் உள்ளிட்ட பல இந்திய மொழிகள் வெளிநாடுகளில் கற்பிக்கப்படுவது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மோடி

மேலும் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாற தரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், இந்தியப் பொருட்கள் என்றால் உயர்தரம் என்ற எண்ணம் உருவாக வேண்டும் என்றும் கூறினார். மரம் நடுதல், மருத்துவ தாவரங்களை பாதுகாப்பது போன்ற தனிநபர் முயற்சிகளை பாராட்டிய பிரதமர், அடுத்த மாதம் நடைபெற உள்ள ஏஐ உச்சி மாநாடு இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை உலகிற்கு காட்டும் என்றும் தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!