பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம்! மோடி திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம்!

 
மோடி

தமிழ்நாட்டுக்கு வரவுள்ள நரேந்திர மோடி, திருப்பரங்குன்றம் முருகன்  கோயிலில் தரிசனம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வர உள்ள நிலையில் அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. கடந்த மாதம் 23ம் தேதி  நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து மார்ச் 1ம் தேதி மதுரையில் நடைபெறும் கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார். பிப். 28ம் தேதி சென்னை வரவுள்ள பிரதமர், கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கி, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது. மறுநாள் காலை புதுச்சேரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அங்கிருந்து மதுரை செல்கிறார்.

திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம் செய்த பின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மார்ச் 6ஆம் தேதி வேலூர் மற்றும் மார்ச் 11ம் தேதி திருச்சி, தஞ்சாவூர்   நகரங்களில் நடைபெறும் கூட்டங்களிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். மார்ச் மாதத்தில் மட்டும் மூன்று முறை தமிழகத்திற்கு அவர் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!