மோடிக்கு 3,00,00,000 கோடி ஃபாலோயர்ஸ்... யூடியூப்பில் புதிய சாதனை படைத்து உலகத் தலைவர்களில் முதலிடம் !

 
திருப்பரங்குன்றம் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் 3 கோடி சந்தாதாரர்களைக் கடந்துள்ளது. சமூக வலைதளங்களில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் அவர், கடந்த பிப்ரவரி 26ம் தேதி Instagram தளத்தில் 10 கோடி பின்தொடர்பவர்களை பெற்ற முதல் உலகத் தலைவர் என்ற பெருமையையும் பெற்றார். மேலும் X தளத்திலும் 106 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

இன்றைய கணக்குப்படி, அவரது யூடியூப் சேனல் 3 கோடி சந்தாதாரர்களை எட்டியுள்ளது. இதன் மூலம் உலக அளவில் அதிக சந்தாதாரர்களைக் கொண்ட அரசியல் தலைவராக அவர் முதலிடத்தில் உள்ளார். இந்த எண்ணிக்கை, முன்னாள் பிரேசில் அதிபர் ஜேர் போல்சனாரோவை விட சுமார் 4 மடங்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்வை விட 7 மடங்கும் அதிகம் என கூறப்படுகிறது.

இந்திய அளவில் ராகுல் காந்தியின் 12.6 மில்லியன் சந்தாதாரர்களை விட 3 மடங்கு அதிகமாகவும், இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகியவற்றை விட 4 மடங்கு அதிகமாகவும் உள்ளது. சுமார் 33 ஆயிரம் வீடியோக்கள் கொண்ட இந்த சேனலில் அரசுத் திட்டங்கள், வெளிநாட்டு பயணங்கள், கலாசார நிகழ்வுகள் உள்ளிட்ட பல பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!