போரால் தீர்வு இல்லை... பிரதமர் மோடி முக்கிய கருத்து!

 
மோடி மோடி

 

எந்தவொரு பிரச்னைக்கும் ராணுவ மோதல் தீர்வாகாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப்பை சந்தித்த போது அவர் இந்த கருத்தை தெரிவித்தார். புவிசார் அரசியல் மாநாடான ரெய்சினா உரையாடல் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பின்லாந்து அதிபர் பங்கேற்றுள்ளார். இந்த சந்திப்பு உலக அரசியல் சூழலில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீனம்

இந்தியா மற்றும் பின்லாந்து ஆகிய இரண்டு நாடுகளும் சட்டமும் பேச்சுவார்த்தையும் மீதான நம்பிக்கையில் செயல்படுகின்றன என பிரதமர் மோடி கூறினார். எந்த பிரச்னைக்கும் போர் தீர்வாகாது என்பதில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேற்கு ஆசியா அல்லது உக்ரைன் போன்ற பகுதிகளில் மோதல்கள் ஏற்பட்டாலும் அமைதியான வழியில் முடிவுக்கு கொண்டு வர இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும் என்றும் கூறினார்.

மேலும் பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் முற்றிலும் ஒழிப்பது இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதேவேளை பிப்ரவரி 28 முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் பல நகரங்களில் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் போர் மற்றும் பயங்கரவாதம் குறித்து மோடி வெளியிட்ட கருத்து உலக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!