மார்ச் 11ம் தேதி பிரம்மாண்ட என்டிஏ மாநாடு.. பிரதமர் மோடி தொடங்கி வைப்பு!
கேரள மாநிலம் கொச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பெரிய தேர்தல் பிரச்சார மாநாடு மார்ச் 11-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கலூரில் உள்ள ஜவஹர்லால் சர்வதேச திடலில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு இந்த மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த மாநாடு குறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் எஸ். சுரேஷ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த செய்திக்குறிப்பில் மாற்றத்தை தொடங்கட்டும், மோடியுடன் வளர்ச்சியடைந்த கேரளம் என்ற முழக்கத்தை கூட்டணி ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மார்ச் 11-ம் தேதி காலை பிரதமர் மோடி கொச்சி சர்வதேச விமான நிலையத்தை அடைவார். பின்னர் அகில கேரள தீவர சபையின் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஹெலிகாப்டரில் செல்வார் எனக் கூறியுள்ளார்.

அதன் பிறகு கலூர் திடலில் நடைபெறும் மத்திய அரசு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. பிற்பகல் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி மாநாட்டில் அவர் கலந்து கொண்டு உரையாற்றுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் உட்பட கூட்டணி தலைவர்கள் பங்கேற்கின்றனர். பிரதமரின் உரையில் கேரளத்தை சார்ந்த சில முக்கிய அறிவிப்புகள் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
