மறக்க முடியாத தருணம்... தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்களுடன் பணி செய்த பிரதமர் மோடி... நெகிழ்ச்சி வீடியோ!

 
tea tea

இந்தியாவின் தேயிலை நகரம் என்று அழைக்கப்படும் அசாம் மாநிலத்தின் திப்ருகர் மாவட்டத்திற்கு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். அரசியல் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு நடுவே சற்றும் எதிர்பாராத விதமாக அங்குள்ள பசுமையான தேயிலை தோட்டங்களுக்குப் பிரதமர் மோடி நேரில் சென்றார். அங்கே கடுமையாக உழைத்துக் கொண்டிருந்த தேயிலை தோட்டத் தொழிலாளர்களுடன் மிக எளிமையாகத் தரையில் அமர்ந்து கலந்துரையாடினார்.

அவர்களின் கோரிக்கைகளையும் அன்றாட வாழ்க்கை முறைகளையும் கேட்டறிந்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுடன் இணைந்து உற்சாகமாகத் தேயிலை பறிக்கும் பணியிலும் ஈடுபட்டார். பிரதமர் மோடியின் இந்த எளிமையான அணுகுமுறை அங்கிருந்த தொழிலாளர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த மறக்க முடியாத தருணங்கள் குறித்த புகைப்படங்களைத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி இது ஒரு அற்புதமான அனுபவம் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் களத்தின் பரபரப்பிற்கு மத்தியிலும் உழைக்கும் மக்களுடன் அவர் நேரத்தைச் செலவிட்ட இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகின்றன. உழைப்பின் மேன்மையைப் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ள இந்தப் புகைப்படங்கள் அரசியல் எல்லைகளைத் தாண்டி பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகின்றன. சாதாரண மக்களுடன் பிரதமர் காட்டிய இந்த நெருக்கம் அசாம் மாநில மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!