பிரதமர் மோடி சென்னை வருகை... ட்ரோன்கள் பறக்கத் தடை, 3 அடுக்கு பாதுகாப்பு!
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நாளை (மார்ச் 3) சென்னை வருகிறார். நாளை இரவு சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கும் அவர், மறுநாள் காலை தமிழக பாஜக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். அதனைத் தொடர்ந்து மதியம் கேரளாவிற்குப் புறப்பட்டுச் செல்கிறார். பிரதமரின் இந்த வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு காரணங்களுக்காக மீனம்பாக்கம், கிண்டி ஆகிய பகுதிகள் மற்றும் பிரதமர் பயணிக்கும் வழித்தடங்கள் அனைத்தும் 'சிவப்பு மண்டலமாக' அறிவிக்கப்பட்டுள்ளன. மார்ச் 3 மற்றும் 4 ஆகிய இரண்டு நாட்களிலும் இந்தப் பகுதிகளில் அரசு அனுமதியின்றி டிரோன் கேமராக்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விடுவதற்குச் சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் கடும் தடை விதித்துள்ளார். மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வருகையையொட்டி சுமார் 3,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையம் முதல் அவர் தங்கும் விடுதி வரை உள்ள சாலைகள் தீவிரக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசியல் சூழலில் பாரதிய ஜனதா நிர்வாகிகளுடனான இந்தத் திடீர் ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
