மோடி வருகை... ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

 
ராமேஸ்வரம்

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் அடுத்த பாம்பனில் சுமார் 550 கோடி மதிப்பீட்டில் செங்குத்தாக தூக்க கூடிய தூக்கு பாலம் 3 ஆண்டுகளுக்கு மேல நடைபெற்று வந்தது. இதனையடுத்து  ஏப்ரல் 6ம் தேதி பாரத பிரதமர் திரு. மோடி  ராமேஸ்வரத்துக்கு வருகை தந்து பாம்பன் பாலத்தை திறந்து வைத்து ரயில் சேவையை ராமேஸ்வரத்திற்கு அர்ப்பணிக்க உள்ளார். பிரதமரின் வருகை ஒட்டி பாதுகாப்பு பணிக்காக 10 எஸ்பி, 15 டிஐஜி, 40 டிஎஸ்பி உட்பட  3500 போலீசாரை உட்படுத்தி மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் .

 ராமேஸ்வரம்

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு,  ஏப்ரல் 6ம் தேதி  ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

 பிரதமர் மோடி
இந்நிலையில், பிரதமர் மோடி நாளை ஏப்ரல் 6ம் தேதி  ராமேஸ்வரத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு ராமநாதசாமி கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தரிசனம் மற்றும் தீர்த்த நீராட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 3:30 மணிக்கு மேல் வழக்கம் பக்தர்கள் தரிசனம் செய்து கொள்ளலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web