மோகன்லால் அரசுப் பேருந்துகளின் விளம்பர தூதராக நியமனம்!
கேரள அரசு போக்குவரத்துக் கழகத்தின் விளம்பர தூதுவராக நடிகர் மோகன்லால் நியமிக்கப்பட்டுள்ளார். கே.எஸ்.ஆர்.டி.சிக்காக எந்த ஊதியமும் பெறாமல் இலவசமாக சேவை செய்ய அவர் முன்வந்துள்ளார். இனி வெளியாவுள்ள கே.எஸ்.ஆர்.டி.சி விளம்பரங்களில் மோகன்லால் இடம்பெறுவார்.

விளம்பர படங்களில் கட்டணம் இன்றி நடிக்கவும் மோகன்லால் சம்மதம் தெரிவித்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் கணேஷ்குமார் தெரிவித்துள்ளார். மோகன்லாலை வைத்து சில புதிய விளம்பர படங்களை எடுக்க கே.எஸ்.ஆர்.டி.சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பு கேரளாவில் வரவேற்பை பெற்றுள்ளது.

கேரள அரசு போக்குவரத்துக் கழகம் தற்போது 4,952 பேருந்துகளை இயக்கி வருகிறது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்கும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. டிக்கெட் கட்டணத்துடன், பேருந்து நிலையங்கள், டெப்போக்கள், கடை வாடகை, பெட்ரோல் பங்குகள் மூலமும் கழகத்திற்கு வருவாய் கிடைத்து வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
