பரபரப்பு நிமிடங்கள்... பயங்கர சத்தத்துடன் பூகம்பமே வந்திருச்சுனு நினைச்சேன்.. விமானம் விழுந்ததை நேரில் பார்த்தவர்!

 
பரபரப்பு நிமிடங்கள்... பயங்கர சத்தத்துடன் பூகம்பமே வந்திருச்சுனு நினைச்சேன்.. விமானம் விழுந்ததை  நேரில் பார்த்தவர்!  


அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட  ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில்  விமான விபத்தை  நேரில் சென்று பார்த்தவர்  சொன்ன வார்த்தைகள் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விமான விபத்தின் சத்தம் பூகம்பம் வந்துவிட்டதோ என்று தோன்ற வைத்துவிட்டதாக கூறினார். அத்துடன்  எங்கும் விமான பாகங்களும், சடலங்களும் இருந்ததாக கூறியுள்ளார்.   


அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே சிக்னலை இழந்த நிலையில், அடுத்த சில நொடிகளில் மேகானி நகரில் அமைந்துள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதியின் கட்டடத்தில் விழுந்து நொறுங்கி இருக்கிறது. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் மொத்தமாக 242  அதாவது 7 குழந்தைகள் உட்பட 230 பயணிகளும், 2 பைலட் மற்றும் 10 விமான ஊழியர்களும் பயணித்தனர்.  இதில் 133 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மிகவும் கொடூரமான விபத்து என்பதால், உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.  

கோர விமான விபத்து... மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  குஜராத் விரைகிறார்!  

விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சில நொடிகளுக்கு முன்பாக மே டே அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. விமான கட்டுப்பாட்டை இழந்து அபாயகரமான நேரங்களில் கொடுக்கப்படுவதே இந்த மே டே அலர்ட். இந்த அலர்ட் கொடுக்கப்பட்ட சில நொடிகளிலேயே வானில் கரும்புகை எழுந்தது.  

இந்த நிலையில் விமான விபத்தை நேரில் பார்த்த ஒருவர்  விமானம் மோதி வெடித்து சிதறிய சத்தத்தால் பூகம்பம் வந்துவிட்டதோ என அதிர்ச்சி அடைந்துவிட்டேன்.  வீட்டில் இருந்து பின்னர் வெளியில் வந்து பார்த்த போது, கரும்புகை சூழ்ந்திருந்தன. விபத்து நடந்த இடத்திற்கு சென்ற போது, எங்கு பார்த்தாலும் விமான பாகங்களும், மனித உடல்களும் சிதறி கிடந்தன. மருத்துவக் கல்லூரி விடுதியில்  உணவருந்தி கொண்டிருந்த மாணவர்களும் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது