இலவச மோமோஸ் ஆசை காட்டி ரூ.85 லட்சம் நகைகள் மோசடி!

 
மெமோஸ்
 

உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் இலவசமாக மோமோஸ் தருவதாக கூறி, 7-ஆம் வகுப்பு பயிலும் சிறுவனை ஏமாற்றி, வீட்டில் இருந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான நகைகளை 3 இளைஞர்கள் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் சகோதரி நகைகளை கேட்டு பெற்றோரிடம் அழுததையடுத்து, அலமாரியைத் திறந்து பார்த்தபோது நகைகள் இல்லாதது தெரியவந்தது.

பெற்றோர் கேட்டபோது, மோமோஸ் கடை நடத்தும் வியாபாரிகளிடம் இலவச உணவுக்காக நகைகளை கொடுத்ததாக சிறுவன் கூறியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், தியோரியா–கசாயா சாலையில் மோமோஸ் கடை நடத்தும் 3 இளைஞர்களே இதற்கு காரணம் என கண்டறிந்தனர். குறிப்பிட்ட காலமாக சிறுவனுடன் நெருக்கம் ஏற்படுத்தி, அவனின் நம்பிக்கையைப் பெற்ற பின்னரே இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் கொடுத்த நகைகள் அனைத்தும் அவனின் சகோதரியுடையவை என்றும், அதன் மதிப்பு ரூ.85 லட்சம் எனவும் காவல் துறை தெரிவித்துள்ளது. சிறுவனின் தந்தை விமலேஷ் மிஸ்ரா வாரணாசியில் கோயிலில் பூசாரியாக பணியாற்றி வருகிறார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். அறிமுகமில்லாத நபர்களின் பேச்சை நம்ப வேண்டாம் என குழந்தைகளுக்கு பெற்றோர் அறிவுறுத்த வேண்டும் என்றும் காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!