மோமோஸ் சாப்பிட்ட 2 குழந்தைகள் உடல் நீலநிறமாகி உயிரிழப்பு!

 
மேமோஸ் மேமோஸ்

 

பஞ்சாப் மாநிலம் தரண் தரண் பகுதியில் துரித உணவு சாப்பிட்ட பிறகு 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தானிகா (9) மற்றும் ஆரவ் (6) என்ற சகோதர, சகோதரிகள் சனிக்கிழமை இரவு வெளியிலிருந்து வாங்கிய மோமோஸ் மற்றும் சோயா உணவுகளை சாப்பிட்டதாக தெரிகிறது.

உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் இருவருக்கும் வாந்தி மற்றும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. பின்னர் மருந்து கொடுத்து அவர்கள் தூங்கச் சென்றதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் குழந்தைகள் எழாததால் பார்த்தபோது இருவரும் படுக்கையிலேயே உயிரிழந்திருந்ததை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

momos

உயிரிழந்த குழந்தைகளின் உடல் நீல நிறமாக மாறியிருந்ததால் சந்தேகம் எழுந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதே உணவை சாப்பிட்ட அவர்களின் தாய்க்கு எந்த பாதிப்பும் இல்லாததும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. உணவால் விஷ பாதிப்பு ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா என்பது குறித்து தடயவியல் நிபுணர்கள் மாதிரிகள் சேகரித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!