அட... திருமணத்தில் ரூ.8.5 கோடி பணமழை... வைரல் வீடியோ!

 
பணமழை

பஞ்சாப் மாநிலத்தில் டர்ண் டரன் மாவட்டத்தின் பட்டி பகுதியில் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற்ற திருமண விழாவில் மணமகள் மீது பணம் பொழியும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. முதலில், சுமார் ரூ.8.5 கோடி மதிப்பிலான பணம் வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. பலரும் ஆடம்பர செலவுகளை விமர்சித்தனர்.

ஆனால் இந்த விவகாரம் குறித்து மணமகனின் சகோதரர் விளக்கம் அளித்துள்ளார். திருமணத்தில் வீசப்பட்ட பணம் கோடிகளில் அல்ல, வெறும் 2 முதல் 4 லட்சம் ரூபாய் மட்டுமே என அவர் தெரிவித்தார். தவறான தகவல்கள் பரவி மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் கூறினார்.

பஞ்சாபி கலாசாரத்தில் திருமணங்களில் மணமக்களை வாழ்த்தும் விதமாக பணம் வீசுவது வழக்கமாக உள்ளது. மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இந்த மரபு, சில நேரங்களில் சமூக வலைதளங்களில் தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. உண்மை தகவலை உறுதி செய்யாமல் பரவும் செய்திகளால் தேவையற்ற சர்ச்சைகள் உருவாகும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் காட்டியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!