நாட்டுப்புற பாடகர் மீது திடீர் பண மழை.. வைரலாகும் வீடியோ!

குஜராத் மாநிலம் வல்சாத் நகரில் திருவிழா ஒன்றில் பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரபல குஜராத்தி நாட்டுப்புற பாடகரான கிர்திதன் காத்வி, தன் இசைக் குழுவுடன் பங்கேற்று பாடல்கள் பாடினார். பாடகர் கிர்திதன் காத்விக்கு என்று அந்த மாநிலத்தில் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சியில் எராளமான இளைஞர்கள் உள்ளிட்டோர் குவிந்தனர்.
பாடகர் கிர்திதன் காத்வி பாடல்களை பாட தொடங்கியதும் அங்கு கூடியிருந்தவர்கள் உற்சாகம் அடைந்தனர். அவர் பாடல்களை பாட பாட அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாகமடைந்தனர். இதனால் ரூபாய் நோட்டுகளை எடுத்து பாடகர் காத்வி மீது வீசி பண மழை பொழிந்தனர்.
ஒவ்வொரு நோட்டாக எடுத்து மேடையை நோக்கி மக்கள் வீசினர். இதனால், மேடை முழுவதும் ரூபாய் நோட்டுகளால் நிரம்பியது. நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்கள் இதற்காக 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுக் கட்டுகளாக மாற்றி கொண்டு வந்திருந்தனர்.
குஜராத்தில் இதுபோல் நடப்பது வழக்கம்தான். அதிலும், காத்வியின் நிகழ்ச்சியில் பணம் மழை கொட்டும். குறிப்பாக கடந்த ஆண்டு காத்வியின் இசை நிகழ்ச்சியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நோட்டுகளை பொதுமக்கள் பண மழையாக பொழிந்தனர் என்றார்.
இது குறித்து நாட்டுப்புறப் பாடகர் காத்வி கூறுகையில், இந்த நிகழ்ச்சி ஆதரவற்ற, நோயுற்ற பசுக்களைப் பாதுகாப்பதற்காக ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்தப் பணம் முழுவதும் அறைக்கட்டளைக்கே வழங்கப்படும், என்று தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க