குழந்தையை சரசரவென இழுத்து சென்ற குரங்கு... பகீர் வீடியோ!
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வீட்டின் வெளியே சிறிய குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென வந்த குரங்கு மின்னல் வேகத்தில் அதன் கையைப் பிடித்து இழுத்துச் செல்ல முயன்றது. எதிர்பாராத தாக்குதலால் குழந்தை அலறி அழுதது.
Monkey tries to take baby with him pic.twitter.com/d28I8b5hL9
— news for you (@newsforyou36351) January 21, 2026
மனிதர்களைக் கண்டால் ஓடும் குரங்குகள், இந்த சம்பவத்தில் கடும் ஆக்ரோஷமாக நடந்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கிருந்தவர்கள் தடியால் அடித்தும், சத்தம் போட்டும் விரட்ட முயன்றனர். ஆனால் குரங்கு குழந்தையை விடாமல் நீண்ட தூரம் தரதரவென இழுத்துச் சென்றது.
நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மக்கள் தீவிரமாக செயல்பட்டதால் குரங்கு குழந்தையை விட்டுவிட்டு தப்பி ஓடியது. அதிர்ஷ்டவசமாக குழந்தை பெரிய காயமின்றி மீட்கப்பட்டது. குடியிருப்பு பகுதிகளில் குரங்குத் தொல்லை அதிகரிப்பதால், குழந்தைகளை தனியாக விட வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
