உயிரிழந்த மூதாட்டிக்குக் குரங்கு அஞ்சலி... நெகிழ்ச்சி வீடியோ!

 
monkey monkey

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உயிரிழந்த 80 வயது மூதாட்டி ஒருவருக்குக் குரங்கு ஒன்று மனிதர்களைப் போலவே அஞ்சலி செலுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பகுதியில் வசித்து வந்த நிர்மலா தேவி என்ற மூதாட்டி வயது முதிர்வு காரணமாகக் காலமானார். அவரது உடல் இறுதிச் சடங்கிற்காக வைக்கப்பட்டிருந்த போது, அங்கு வந்த ஒரு குரங்கு மூதாட்டியின் உடலைப் பார்த்துத் திகைத்து நின்றது.

யாரும் எதிர்பார்க்காத வகையில், அந்த மூதாட்டியின் அருகே சென்ற குரங்கு அவரது முகத்தைத் தடவிக்கொடுத்து, மனிதர்கள் ஆரத்தழுவுவதைப் போலவே அவரது உடலைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதுள்ளது. நீண்ட நேரம் அங்கிருந்து நகர மறுத்த அந்தப் பிராணி, மூதாட்டியின் மறைவால் நிலைகுலைந்து போனது போலக் காட்சியளித்தது. அந்தப் பெண் உயிருடன் இருந்தபோது அந்தக் குரங்கிற்குத் தினமும் உணவு வழங்கி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஆழமான பிணைப்பை வெளிப்படுத்தும் இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் நெகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். "பகுத்தறிவு உள்ள மனிதர்களே சில நேரங்களில் நன்றியை மறந்துவிடும் நிலையில், வாய் பேச முடியாத இந்த உயிர் காட்டிய அன்பு ஈடு இணையற்றது" எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நன்றியுணர்விற்கு மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளும் சளைத்தவை அல்ல என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!