புஸ்ஸி ஆனந்த் உட்பட 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள் விடுதலை.!

 
புஸ்ஸி ஆனந்த்


சென்னையில் அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பில் இருந்து  கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவத்தை தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாக தன் கைப்பட கடிதம் ஒன்றை விஜய் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் “யாரிடம் நாம் பாதுகாப்பு கேட்பது? ஆட்சியாளர்களை கேட்டு பயனில்லை. எல்லா சூழலிலும் நான் உங்களுடன் நிற்பேன். பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம். இதை நாம் இணைந்தே சாத்தியப்படுத்துவோம்” என பதிவிட்டுள்ளார்.  


இந்நிலையில், தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அந்த கடிதத்தை துண்டு பிரசுராமாக அக்கட்சியினர் வழங்கி வந்ததை பார்வையிட புஸ்ஸி ஆனந்த் வந்திருந்தார். அப்போது, முன் அனுமதி பெறாமல் கூட்டம் கூடியதற்காக புஸ்ஸி ஆனந்த் மற்றும் அவருடன் இருந்தவர்களை போலீசார் கைது செய்து அருகே உள்ள தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.
சென்னை, தி.நகரில் அனுமதியின்றி பிரசுரம் வழங்கியதாக கைது செய்யப்பட்ட தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விடுவிக்கப்பட்டார். மேலும், அவருடன் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகளையும் போலீசார் விடுவித்துள்ளனர்.


தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் கைது செய்யப்பட்டதை கண்டித்து, திருமண மண்டபம் முன்பு த.வெ.கவினர் “விடுதலை செய்.. விடுதலை செய்”.. முழக்கமிட்டனர். மேலும், அந்தந்த மாவட்ட மகளிர் அணியினர் மற்றும் கழக தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!! 

From around the web