10,00,000க்கும் அதிகமானவர்களுக்கு சிகிச்சை... அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
இன்று காலை சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாய் மற்றும் பாம்பு கடிக்கு மருந்துகள் இருப்பில் உள்ளது ” என்று தெரிவித்தார்.
இன்று காலை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கதிரியக்க அதிர்வெண் நீக்கியல் கருவியை நோயாளிகளின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டு கதிரியக்க அதிர்வெண் நீக்கியல் கருவியை பயன்பாட்டிற்காக கொண்டு வந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ரூபாய் 42 லட்சம் செலவில் RFA Machine நீதியரசர் சுந்தர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது, புற்றுநோய் வலி மற்றும் நாள்தோறும் சிகிச்சைக்காக RFA machine வழங்கப்பட்டுள்ளது இன்று முதல் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் பேசிய அவர், “தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றால் 50,000முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும். ஆனால் இந்தக் கருவி தற்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுவதால் இலவசமாக நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க முடியும். புற்றுநோய் மற்றும் மூட்டு வலியால் வரும் கடுமையான வலிகளுக்கு உரிய நிவாரண சிகிச்சையானது 2013ம் ஆண்டு முதல் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மயக்கவியல் துறையின் மூலம் செய்யப்பட்டு வருவதாகவும் நாள்பட்ட வலி என்பது மூன்று மாதங்களுக்கு மேல் தொடர்ச்சியாக நிலையாக ஒரே இடத்தில் இருக்கும் வலி இரக்கம் வலி அல்லது அங்கிருந்து பரவும் வலி, கை கால்களில் ஏற்படும் எரிச்சல் எலும்பு மற்றும் மூட்டுகளில் ஏற்படும் புற்றுநோய் உண்டாகும் தற்கொலைக்கு உண்டாகும் என்பதால் மருந்து மாத்திரை மற்றும் ஊசிகள் மூலம் கட்டுப்படுத்த முடியாத வலிகளுக்கும் நாள்தோறும் சிகிச்சைக்காக RFA machine வழங்கப்பட்டுள்ளது.

தொழு நோயில் கை கால், தோல் பல்வேறு பாதிப்பு உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இந்த பரிசோதனைக்கு பெரும் மக்கள் பேராதரவு தந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வீடாக தேடிச் சென்று 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளை மையப்படுத்தி 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த பரிசோதனை செய்யப்பட தொடங்கியுள்ளது” என்றார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
