1.32 லட்சம் பயனாளிகள்.. ₹1,595 கோடியில் வளர்ச்சி திட்டங்கள்...திண்டுக்கல்லில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!
தென் தமிழகத்தின் மிக முக்கியமான மாவட்டமான திண்டுக்கல்லின் உட்கட்டமைப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில்
சுமார் ரூ.1,595 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று காலை 10 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட 111 திட்டப் பணிகள் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்படுகின்றன. மாவட்டத்தின் வளர்ச்சிக்காக 212 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. அரசுப் போக்குவரத்து கழகத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள புதிய நவீன பேருந்துகளின் சேவையை முதல்வர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.

இந்த விழாவின் ஹைலைட் என்னவென்றால், ஒரே மேடையில் 1 லட்சத்து 2 ஆயிரம் பேருக்குப் பட்டா வழங்கப்பட உள்ளது. இது தவிர, 30 ஆயிரம் பேருக்குப் பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
மதுரையில் இருந்து கார் மூலம் திண்டுக்கல் வரும் முதல்வருக்கு, பாண்டியராஜபுரம் முதல் ஆட்சியர் அலுவலகம் வரை 38 கி.மீ. தூரத்திற்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்காக அமைச்சர்கள் இ.பெரியசாமி மற்றும் அர.சக்கரபாணி ஆகியோர் தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
