150 திருமணங்கள்... கட்டப்பஞ்சாயத்து, கொலை, ஆட்கடத்தல்... ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவு!

மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம், இதுவரை 150 க்கும் அதிகமான திருமணங்களை செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் திருச்சியில் சிறையில் இருந்து வந்த வரிச்சூர் செல்வம், அதன் பின்னர் இனி எந்த தவறும் செய்யமாட்டேன், திருந்தி வாழப் போகிறேன் என்று காவல்துறையினரிடம் எழுதி கொடுத்துவிட்டு, வெளியில் வந்த பின்ன்னர், தனது கூட்டாளி செந்திலைக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த வழக்கு இருக்கிறது. இந்நிலையில், அதன் பின்னரும் ஆள்கடத்தல், கொலை, கட்டப்பஞ்சாயத்து என்று பல்வேறு வழக்குகள் ரவுடி வரிச்சூர் செல்வம் மீது நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் வரிச்சூர் செல்வத்தைச் சுட்டுப் பிடிக்க கோவை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கோவையில் வரிச்சியூர் செல்வமும், அவனது கூட்டாளிகளும் பயங்கர ஆயுதங்களுடன் கட்டப்பஞ்சாயத்திற்காக பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவலர்கள் கோவையில் சோதனை செய்து வருகின்றனர்.
இந்த சோதனையின் போது, தேவைப்பட்டால் வரிச்சூர் செல்வத்தைக் காலில் சுட்டு பிடிக்கவும் காவல்துறையினருக்கு உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!