20க்கு மேற்பட்ட டூ வீலர்கள்... 140 கி.மீ. வேகம்... 'பாலோ செய்யாதீங்கன்னு சொல்லியும் கேட்டாத்தானே?' - விஜய் காரைத் துரத்தியவர்கள் படுகாயம்!

 
விஜய்

ஈரோடு பொதுக்கூட்டம் வெற்றிகரமாக முடிந்தாலும், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. கூட்டத்தை முடித்துக் கொண்டு விஜய் தனது காரில் கோவை நோக்கிப் புறப்பட்ட போது தான் அந்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்தது.

ஏற்கனவே கட்சித் தலைமை சார்பாக ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தலைவரின் காரை யாரும் பின்தொடர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், தலைவரைப் பார்த்த உற்சாகத்தில் தொண்டர்கள் எதையும் கேட்கத் தயாராக இல்லை. 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் விஜய்யின் காரை விரட்டத் தொடங்கின. விஜய் கார் சுமார் 140 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப் பாய்ந்த போதிலும், விடாமல் பின்னாலேயே துரத்தியுள்ளனர் தவெக தொண்டர்கள்.

விஜய் செங்கோட்டையன் செங்கோல்

திருப்பூர் அருகே உள்ள பல்லக்கவுண்டம்பாளையம் மேம்பாலத்தில் கார் சென்றபோதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. முன்னால் சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிர்பாராத விதமாக மோதி கீழே விழ, பின்னால் மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்த மற்ற வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மோதி சிதறின. சுமார் 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. மேம்பாலமே ரத்தக் காடாக மாறியது.

விஜய்

இந்த விபத்தில் பல தொண்டர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. பெரும்பாலானோர் தலைக்கவசம் அணியாமல் வந்ததால் பாதிப்பு அதிகமாக இருந்தது. ஒரு பெண்ணின் முகத்தில் படுகாயம் ஏற்பட்டது, மற்றொரு தொண்டருக்குக் காதில் இருந்து ரத்தம் கொட்டியது. விபத்தில் சிக்கியவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். கரூர் சம்பவத்திற்குப் பிறகு இவ்வளவு நிபந்தனைகள் போட்டும், தொண்டர்கள் ஆர்வக்கோளாறால் இப்படி உயிரைப் பணையம் வைத்துப் பறந்தது இப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!