350-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது... மீண்டும் பரபரப்பு!
சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியை தனியார்மயமாக்கியதற்கு எதிராக போராட்டம் நடத்திய 350-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை போலீஸார் கைது செய்தனர். ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் தற்காலிகமாக பணிபுரிந்து வந்த தூய்மைப் பணியாளர்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூய்மைப் பணியை மாநகராட்சியே நேரடியாக மேற்கொள்ள வேண்டும். அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே, முதல்வர் மு.க.ஸ்டாலின் 7 அறிவிப்புகளை வெளியிட்டதைத் தொடர்ந்து பலர் பணிக்கு திரும்பினர்.
இந்நிலையில், வருவாய் இழப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படும் தூய்மைப் பணியாளரின் 16-ம் நாள் நினைவாக, மூலக்கொத்தளம் மாயானத்தில் அஞ்சலி செலுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீஸார் 350-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
