40 லட்சம் பக்தர்கள்... 4,500 கிலோ நெய்... திருவண்ணாமலையில் மகா தீபத் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்!
திருவண்ணாமலையில் மகா தீபத்திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த வருட மகா தீபத்திருவிழாவிற்கு 40 லட்சம் பக்தர்கள் வரையில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா துர்க்கையம்மன் உற்சவத்துடன் தொடங்கியது. அடுத்த மாதம் டிசம்பர் 7 வரை தொடரும் இந்த விழாவின் சிறப்பு நிகழ்வான பரணி தீபம் டிசம்பர் 3 காலை ஏற்றப்படும். அதே நாளில் மாலை, கோவில் பின்புற மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டு, இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு நடைபெறும் தீபத்திருவிழாவில் சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் மற்றும் காவல் துறை பாதுகாப்பு மற்றும் ஒழுங்கமைப்பு பணிகளை விரிவாக மேற்கொண்டு வருகின்றன. பக்தர்களின் நெரிசலை கருத்தில் கொண்டு போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக, கோவில் இணை ஆணையர் அலுவலகம் அருகில் சிறப்பு வசதி பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மேலும், தீப ஏற்றத்திற்காக திருவண்ணாமலை ஆவின் நிறுவனத்திடமிருந்து 4,500 கிலோ முதல்தர நெய் கொள்முதல் செய்யப்பட்டு, கோவில் ராஜகோபுரம் அருகிலுள்ள திட்டி வாசல் பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
