65லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ் அப் கணக்குகளுக்கு தடை!! பயனர்கள் அதிர்ச்சி!!

 
வாட்ஸ் அப்

 உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டது வாட்ஸ் அப் செயலி. இந்தியாவை பொறுத்தவரை  500 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டது . வாட்ஸ்அப் பயனர்களுக்கு புதிய  தகவல் தொழில்நுட்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 2021ல் உருவாக்கப்பட்ட விதிகளின் படி இந்தியாவில் மட்டும்  சுமார்  65 லட்சத்துக்கும் அதிகமான தவறான கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் மே 1 மற்றும் மே 31க்கு இடையில், 6,508,000 வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன,

வாட்ஸ் அப்

மேலும் 2,420,700 கணக்குகள்  பயனர்களிடமிருந்து எந்த அறிக்கையும் வருவதற்கு முன்பே தடை செய்யப்பட்டன.  ஏப்ரல் மாதத்தில், 74 லட்சத்திற்கும் அதிகமான  கணக்குகள் தடை செய்யப்பட்டன.   இது குறித்து மெட்டா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “பயனர்-பாதுகாப்பு அறிக்கையில் பெறப்பட்ட பயனர் புகார்களின் விவரங்கள் மற்றும் வாட்ஸ்அப்பால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் படி வாட்ஸ் அப்பை துஷ்பிரயோகம்  செய்வதை  தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளது.  இது குறித்த சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் வகையிலும் குறைகளை களையும் வகையிலும்  குறைகள் மேல்முறையீட்டுக் குழுவை  மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

வாட்ஸ் அப்

 திறந்த, பாதுகாப்பான, நம்பகமான மற்றும் பொறுப்பான இணையத்தை நோக்கிய வகையில் இந்த  முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 'டிஜிட்டல் பயனாளிகளின்' உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் சில திருத்தங்களை அறிவித்துள்ளது இவைகளை தவிர  “ வாட்ஸ்அப் அடிக்கடி தனது செயலியில் அடிக்கடி அப்டேட்களையும்  செய்து வருகிறது. பயனர்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும், அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் பல்வேறு அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அடையாளம் தெரியாத அழைப்பாளர்களை ப்ளாக் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web