விமான விபத்தை காட்டிலும் தீரா சோகம்... டிஎன்ஏ பரிசோதனை முடிவுக்காக கண்ணீருடன் காத்திருக்கும் உறவுகள்!

 
விமான விபத்து

 குஜராத்திலிருந்து லண்டன் புறப்பட்ட சில நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம்  வெடித்து சிதறியது. இதில் 274 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா வந்து லண்டன் திரும்பியவர்களும், லண்டனில் புது வாழ்வைத் தொடங்கச் சென்றவர்களும் விமான விபத்தில் பலியான நிலையில், அவர்களது உறவினர்கள், அகமதாபாத் அரசு மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனைக்காகக் காத்து கிடக்கின்றனர்.  

விமான விபத்து

புது வாழ்வைத் தொடங்குவதற்காக இந்தியாவிலிருந்து லண்டன் புறப்பட்டவர்கள், ஏர் இந்தியா விமான விபத்தினால் பலியான நிலையில், அவர்களது உறவுகள் துயரத்தில் மூழ்கியுள்ளன. பலியானவர்களின் உறவினர்கள் அகமதாபாத் அரசு மருத்துவமனையில் உள்ள ஒரு சில அறைகளில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலரும் பேசுவதற்கு வார்த்தைகள் இன்றி கடும் மன அழுத்தத்துடன் அமர்ந்துள்ளனர்.  

விமான விபத்து

இங்கிருக்கும் சூழ்நிலை குறித்து குடும்பத்துக்கு போனில் தகவலை அப்டேட் செய்து வருகின்றனர்.  அடிக்கடி செல்போனில், தங்களை துயரில் விட்டுச் சென்ற உறவைப் பார்த்தபடி கண்ணீர்சிந்தியபடி டிஎன்ஏ பரிசோதனைக்காகக் காத்துக்கிடக்கின்றனர்.  மறுபக்கம், அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறையில் தடய அறிவியல் துறையினர், தொடர்ச்சியாக இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும்  பிரேத பரிசோதனை செய்தும், டிஎன்ஏ சோதனைக்களுக்கான  ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கின்றனர்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது