பூட்டிய வீட்டிற்குள் தாய், 2 மகன்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!
டெல்லியில் நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு வீட்டிற்கு அதிகாரிகள் சென்ற போது, தாய் மற்றும் அவரது இரண்டு மகன்கள் வீட்டின் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தீவிர மனஉளைச்சலில் இருந்துள்ளனர் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சொத்துகளைப் பறிமுதல் செய்வது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றுவதற்காக, கிழக்கு டெல்லியில் உள்ள ஒரு வீட்டிற்கு போலீசார் நேற்று மதியம் 2.40 மணியளவில் சென்றனர். அந்த வீட்டின் கதவு உள் பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவைத் தட்டியும் யாரும் திறக்காததால், போலீசார் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

வீட்டிற்குள் அனுராதா கபூர் (வயது 52), அவரது மகன்கள் ஆஷீஷ் கபூர் (32), சைதன்யா கபூர் (27) ஆகிய மூவரும் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்தனர். சடலங்களைக் கைப்பற்றிய போலீசார், அங்கிருந்த ஒரு அறையில், கையால் எழுதப்பட்ட தற்கொலைக் குறிப்பு ஒன்றைக் கண்டெடுத்துள்ளனர். அதை வைத்துப் பார்க்கும் போது, அந்தக் குடும்பத்தினர் சொத்து விவகாரங்கள் காரணமாகத் தீவிர மனஉளைச்சலில் இருந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
