வரதட்சணை கொடுமையால் தாய், மகள் தற்கொலை - தப்ப முயன்ற மாப்பிள்ளை கைது!
திருவனந்தபுரம் கமலேஸ்வரம் பகுதியில் வசித்து வந்த கிரீமா மற்றும் அவரது தாய் ஆகியோர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், கிரீமாவின் கணவர் உன்னிகிருஷ்ணன் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.கிரீமாவுக்கும் உன்னிகிருஷ்ணனுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. உன்னிகிருஷ்ணன் அயர்லாந்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.

திருமணத்தின் போது கிரீமாவின் பெற்றோர் 200 சவரன் தங்க நகைகளை வரதட்சணையாக வழங்கியுள்ளனர். திருமணம் முடிந்த சில காலத்திலேயே கூடுதல் வரதட்சணை கேட்டு உன்னிகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் கிரீமாவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.கணவர் மற்றும் புகுந்த வீட்டாரின் கொடுமை தாளாமல், கிரீமாவும் அவரது தாயும் சயனைடு உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது தற்கொலைக் கடிதத்தில் உன்னிகிருஷ்ணனின் கொடுமைகள் குறித்துக் குறிப்பிடப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்ததை அறிந்த உன்னிகிருஷ்ணன், கேரளாவிலிருந்து வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டார்.அவர் மும்பை சர்வதேச விமான நிலையம் வழியாக அயர்லாந்திற்குத் தப்ப முயன்றபோது, லுக்-அவுட் நோட்டீஸ் (Look-out notice) அடிப்படையில் மும்பை விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் கேரளா போலீசார் அங்கு சென்று அவரைக் கைது செய்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
