தாய், தந்தை கொடூர கொலை.. நாடகமாடிய மகன் கைது.. வெளியான பகீர் வாக்குமூலம்!

 
ரேணுகாதேவி

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள அந்தியூர் அத்தாணி என்ற பகுதியில் கிருஷ்ணமூர்த்தி (55)- ரேணுகாதேவி (42) தம்பதி வசித்து வந்தனர். இவர்களது மகன் கார்த்தி (21), பொக்லைன் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர்கள் மூவரும் சில ஆண்டுகளாக ஒத்தப்பனை மேடு பகுதியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவரது தோட்டத்து வீட்டில் குடியிருந்து வந்தனர். 

இந்த நிலையில் நேற்று அதிகாலை அவர்கள் வீட்டின் அருகேயுள்ள கிணற்றில் இருந்து, காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்.. என்று அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அப்பகுதியினர் அங்கு சென்று பார்த்தபோது கிணற்றில் கார்த்தி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் போலீசார் விரைந்துசென்று அவர்களை மீட்டனர்.

ரேணுகாதேவி

அப்போது, கார்த்தியின் தாய் ரேணுகாதேவி சடலமாகவும், தந்தை கிருஷ்ணமூர்த்தி தலையில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய நிலையிலும் இருந்துள்ளார். கார்த்தியையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கார்த்தியின் தந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து கார்த்தியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், நேற்று முன்தினம் நள்ளிரவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. நான் வெளியே வந்து பார்த்தேன். அப்போது 2 பேர் பொக்லைன் பேட்டரிகளை கழட்டிக் கொண்டிருந்தனர். அவர்களை பிடிக்க முயன்றபோது இருவரும் என்னை தாக்கி கிணற்றுக்குள் தூக்கி வீசினர். அதற்கு பிறகு நடந்த சம்பவம் எதுவும் எனக்குத் தெரியாது,  என்று கூறியுள்ளார்.

ரேணுகாதேவி

எனினும் அவரது பதிலில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் கார்த்தியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில், கார்த்தி தனது பெற்றோரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்ததும், அவரே கிணற்றில் குதித்து திருடர்கள் தாக்கியதாக நாடகமாடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், தொடர்ந்து அவரிடம் பெற்றோரை கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web