கொடூரம்... பசிக்காக அழுத 2 மாத குழந்தையை வாயில் துணியை வைத்து அடுப்பில் போட்டு எரித்த தாய்!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே திண்டிகல் பகுதியில் பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. இரண்டு மாத ஆண் குழந்தையை அதன் தாய் மம்தா எரித்துக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அவர், கட்டுமான பணிக்காக அப்பகுதியில் தங்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை தொடர்ந்து அழுததால் ஆத்திரமடைந்த மம்தா, முதலில் குழந்தையின் வாயில் துணி வைத்து அடைத்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் சமைக்கும் அடுப்பில் வைத்து எரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் சந்தேகத்துடன் தகவல் அளித்ததைத் தொடர்ந்து விவரம் வெளிச்சத்துக்கு வந்தது.
தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மம்தாவை கைது செய்தனர். அவர்மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
