தாய், குழந்தையை கொலை செய்து நாடகம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்!

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே குழந்தையை கொலை செய்து விட்டு இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சில நாட்களுக்கு முன் தகவல்கள் வெளியாகின.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக அவரது கணவரே இருவரையும் கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்து நடத்தப்பட்ட தீவிர போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. குழந்தையையும், மனைவியையும் கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவர் கவின் பிரசாத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கவின் பிரசாத்திடம் நடத்திய விசாரணையில் மனைவி அமராவதியின் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக இருவரையும் கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!