மகனுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை... பெரும் சோகம்!
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பகுதியில் சோகமான சம்பவம் நடந்தது. மாதாங்கோவில் தெருவைச் சேர்ந்தவர் இராமலெட்சுமி. இவருடைய மகள் உமா (31). உமாவுக்கும் கோவிந்தராஜ் என்பவருக்கும் 10 வருடங்களுக்கு முன் திருமணம் ஆனது. இவர்களுக்கு தர்சிக் முகுந்த் (9) என்ற மகன் இருக்கிறான்.
கோவிந்தராஜ், மகேந்திரன் என்பவரிடம் ரூ. 5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அந்தக் கடனுக்காக மனைவி உமாவின் தாயார் பெயரில் உள்ள வீட்டை மகேந்திரன் கிரையம் பெற்றதாகத் தெரிகிறது. இந்தச் சூழலில் கோவிந்தராஜ் தலைமறைவாகி எங்கோ சென்றுவிட்டார். கடன் தொல்லையால் அவர் எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை.

வீட்டைத் திரும்பப் பெற உமா தரப்பில் ரூ. 6 லட்சம் தருவதாகக் கூறப்பட்டது. ஆனால் மகேந்திரன் வீட்டைத் தர மறுத்தார். அவர் ரூ. 8.50 லட்சம் தந்தால் தான் வீட்டைத் திருப்பித் தருவேன் என்றார். கடந்த மாதம் ஒரு லட்சம் ரூபாய் அட்வான்ஸ் பணத்தையும் மகேந்திரன் பெற்றார். ஆனால் 10 நாட்களுக்கு முன் உமா வீட்டிற்குச் சென்ற மகேந்திரன், பணம் போதாது எனக் கூறியுள்ளார். வீட்டின் மின் இணைப்பையும் அவர் துண்டித்துச் சென்றுள்ளார்.

வீடு தொடர்பாக உமா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் நீதிமன்றம் மூலம் தீர்வு காணும்படி போலீசார் கூறியுள்ளனர். இந்நிலையில், மகேந்திரன் பொது இடத்தில் உமாவை மிரட்டியுள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த உமா நேற்று இரவு விபரீத முடிவெடுத்தார். தனது மகன் தர்சிக் முகுந்த்க்கு பூச்சிக்கொல்லி மருந்தைக் கொடுத்தார். பிறகு தானும் குடித்துள்ளார். மயங்கிக் கிடந்த தாய், மகனை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் உமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுவனுக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உமாவின் தாய் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
