சுட்டெரிக்கும் வெயிலில் மயங்கி விழுந்த தாய்.. கதறித் துடிக்கும் சிறுவன்... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் கொளுத்தும் வெயிலில் ஒரு தாய் மயங்கி விழுந்த நிலையில், அவரை காப்பாற்ற 8 வயது சிறுவன் ஒருவன் கண்ணீருடன் போராடிய காட்சி பார்ப்போர் நெஞ்சை பதற வைத்துள்ளது. கடும் வெப்பம் காரணமாக அந்தப் பெண் சாலையோரம் திடீரென சுருண்டு விழுந்த நிலையில், செய்வதறியாது திகைத்த அந்த சிறுவன் ஓடிச் சென்று தண்ணீர் எடுத்து வந்து தாயின் முகத்தில் தெளித்து எழுப்ப முயற்சித்தான் . காலில் காலணி கூட இல்லாமல் சுட்டெரிக்கும் தார் சாலையில் அந்த பிஞ்சு பாதங்கள் அலைந்து திரிந்த காட்சி, ஒரு குழந்தையின் அளப்பரிய பாசத்தை உலகிற்கு பறைசாற்றியுள்ளது.
🚨Heart-Touching: A Boy Barely 8-9 Years Old, Barefoot and Devoted to His Mother : Fulfilled his duty as a son.
— Ramesh Tiwari (@rameshofficial0) April 2, 2026
This video from Kanpur shows a poor mother lying unconscious under the scorching sun, while her young barefoot son brings water to help her regain consciousness.
On… pic.twitter.com/85DswdPbFt
இந்த நெஞ்சை உருக்கும் சம்பவத்தின் மற்றொரு பக்கம் சமூகத்தின் கோர முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அந்தச் சிறுவன் தனது தாயின் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தபோது, அங்கு திரண்டிருந்த பெரியவர்கள் யாரும் உதவிக்கு முன்வராமல் தங்களது மொபைல் போன்களில் வீடியோ எடுப்பதிலேயே குறியாக இருந்தனர். ஒரு பிஞ்சு குழந்தை கதறி அழுது உதவி கேட்ட பின்பும், மனிதநேயமற்ற முறையில் வேடிக்கை பார்த்த கூட்டத்தின் செயல் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை குவித்து வருகிறது.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வரும் நிலையில், நவீன உலகில் மனிதநேயம் செத்துவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. கல்வி மற்றும் வசதிகள் பெருகினாலும் சக மனிதன் கஷ்டப்படும்போது உதவாத மனப்பான்மை அதிகரித்து வருவது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அந்தச் சிறுவன் காட்டிய துணிச்சலும் பாசமும் பலரிடமும் இல்லாமல் போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கே ஒரு பாடமாக அமைந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
