இப்படியெல்லாமா யோசிப்பாங்க?! கைக்குழந்தைக்கு பூச்சிகளை கொடுத்த தாய்!!

 
பூச்சி

கொரோனா எனும் பெருந்தொற்றுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதாரம், வாழ்க்கை முறையில் பெரும் தாக்கத்தை ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த தாக்கம் நீடிக்கத்தான் செய்கிறது. அதோடு உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் என பலவற்றில் மாற்றம் வந்துவிட்டது.

இந்த நிலையில் கனடாவைச் சேர்ந்த உணவு எழுத்தாளர் ஒருவர் தனது குழந்தையின் உணவில் செய்த குறிப்பிடத்தக்க மாற்றம் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளதுஅவர் தனது குழந்தையின் உணவில் கிரிக்கெட் என்ற பூச்சியை சேர்த்துள்ளார்.

பூச்சி

டொராண்டோவைச் சேர்ந்த டிஃப்பனி லே, தனது குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய பல்வேறு வழிகளில் பரிசோதனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். இதன் விளைவாக, அவர் தனது 18 மாத குழந்தையின் உணவில் கிரிக்கெட் என்ற ஒரு வகை பூச்சியை சேர்க்க முடிவு செய்தார்.குழந்தைக்கு புரத சத்தை இந்த உணவு அதிகரிப்பதாக அவர் கூறினார். இதுகுறித்து பேசிய அவர் , உணவு எழுத்தாளர் என்ற முறையில், நான் எப்பொழுதும் பூச்சிகளை உண்ணுதல் உள்ளிட்ட எதையும் முயற்சி செய்து வருகிறேன். தேள் உள்ளிட்ட பல பூச்சிகளை நான் உணவில் சேர்த்துள்ளேன். 

விலைவாசி உயர்வை சமாளிக்கும் வகையில், கிரிக்கெட் பூச்சி தின்பண்டங்கள், கிரிக்கெட் புரோட்டீன் பவுடர் மற்றும் முழு வறுத்த கிரிக்கெட்டு பூச்சிகள் என பல வகை உணவில் இருந்து புரோட்டீனை பெற முடிவு செய்தேன்.இதனால் எனது மளிகைச் செலவுகளை வாரத்திற்கு சுமார் 8,000 குறைத்தேன். இந்த மாற்றத்திற்கு முன்பு செலவுகள் வாரத்திற்கு சுமார் 25 ஆயிரமாக இருந்தது. இப்போது அது 8,000 வரை குறைந்துள்ளது, என்று தெரிவித்தார்.

வெட்டுக்கிளி

மேலும் அந்த மாற்றத்திற்குத் தன் குழந்தை எப்படித் தகவமைத்துக் கொண்டது என்பதைப் பற்றிப் பேசிய அந்தப் பெண், தன் குழந்தை பூச்சியைப் பார்க்க பயப்படவில்லை என்று கூறினார். தனது குழந்தை புதிய உணவை அச்சமின்றி முயற்சி செய்யக்கூடிய வயதில் இருப்பதாகவும் அவர் கூறினார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web