குடும்பப் பிரச்சினை … 2 மகள்களை கொன்று தாயும் தற்கொலை!

புத்தூர் கிருஷ்ணா நகரை சேர்ந்த சிவசங்கர் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அவரது மனைவி பத்மா, 7 வயது தேஜாஸ்ரீ மற்றும் 5 வயது லாஸ்யா ஆகிய மகள்களுடன் வசித்து வந்தனர். வேலைக்கு சரியாக செல்லாததால் குடும்ப செலவுக்குப் பணம் தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த பத்மா, நேற்றுமுன்தினம் மாலை தனது 2 மகள்களையும் கொன்று விட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்டார்.

வீடு திரும்பிய சிவசங்கர் இதை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தற்கொலைக்கு முன் பத்மா எழுதிய கடிதமும் கைப்பற்றப்பட்டது. குடும்ப தகராறு காரணமா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
